அரச பதவிகளை வகிப்பதை விடுத்து அரசாங்கத்தை விமர்சிக்க முதுகெலும்பு இருந்தால் அரச பதவிகளை இராஜினாமா செய்து அரசாங்கத்தை விமர்சிக்கச் சொல்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
மொட்டு தலைவர்களின் முதுகில் எட்டி உதைக்க வருபவர்களுக்கு காதுகளை பிளக்க பின்வரிசை உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மக்கள் சந்திப்பொன்றில் சிறுபான்மை அரசாங்கக் கட்சிகள் கொழும்பில் கூட்டியிருந்த நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
LNG விநியோக ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் செயற்பாட்டிற்கு எதிராக 11 அரசாங்கக் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று புறக்கோட்டையில் மக்கள் பேரவை கூடியது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)