நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தனவுக்கு வெள்ளை வானில் வந்தவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வெளியான கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதை ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை காலை சந்தேகத்திற்கிடமான வெள்ளை வான் தனது வீட்டின் பின்புறம் வீதியில் வந்ததாகவும், தனது வீட்டின் அருகே நடமாடியது குறித்தும் அவர் கிருலப்பனை காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த விசாரணைகள் தொடர்பாக ஊடகங்களில் ஏதேனும் தகவல் இருந்தால், அவற்றை சிஐடிக்கு சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சர் நேற்று (12 ஆம் திகதி) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கூறினார்.