பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களை வரிசையில் காத்திருக்க வைப்பதா அல்லது பொருட்களை கொண்டுவந்து சாதாரண விலைக்கு அல்லது சற்று ஏற்றுக்கொள்ளக்கூடிய விலை அதிகரிப்புடன் பொதுமக்களுக்கு வழங்குவதா சிறந்தது என்பது மக்களுக்கு தெரியும்.
எவ்வாறாயினும், மக்களை வரிசையில் காத்திருக்க வைப்பதே எதிர்க்கட்சிகளுக்கு விருப்பம். அவ்வாறான நிலைமை காணப்பட்டால் மாத்திரமே அவர்களால் அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சிக்க முடியுமெனவும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.