அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் நடாத்தும் கட்டுரைப் போட்டி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் நடாத்தும் கட்டுரைப் போட்டி!


வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, முப்பத்தொரு ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், கட்டுரைப் போட்டி ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. இக்கட்டுரைப் போட்டியில் வயது வேறுபாடின்றி அனைவரும் பங்குபற்றலாம்.
 
வட மாகாண முஸ்லிம்களின் இன்றைய அவல நிலையும், அதில் இருந்து தீர்வை நோக்கி' எனும் தலைப்பில் இக்கட்டுரைப்போட்டி இடம்பெறவுள்ளது. 

ஆக்கங்கள் இம்மாதம் (ஒக்டோபர்) 30ஆம் திகதிக்கு முன் கிடைக்கக் கூடியவாறும், சுமார் 1,000 சொற்களுக்கு மேற்படாமலும், தட்டச்சு செய்து அனுப்பி வைக்க வேண்டும். வெற்றி பெறும் ஆக்கங்களுக்கு பணப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டியில் முதலாம் இடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு 15,000 ரூபாவும், இரண்டாம் இடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு 10,000 ரூபாவும், மூன்றாம் இடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு 5,000 ரூபாவும் வழங்கப்படும்.

போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். தமிழ்மொழி மூலம் மாத்திரம் இப்போட்டி நடைபெறும். உங்கள் கட்டுரைகளை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்கலாம்.

மின்னஞ்சல் - acumlyfadmn@gmail.com 

அல்லது 

முகவரி - அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், இல: KG 7, எல்விடிகல மாடி வீடு, கொழும்பு 08.


All Ceylon Union of Muslim League Youth Front, No: KG 7, Elvitigala Flat, Colombo 8.


-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.