தனது ஆட்சியில் விவசாயிகளுக்கு இவ்வளவு பிரச்சனைகள் வருவதற்கு இடம் கொடுக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாயிகள் பற்றி இந்த அரசாங்கத்திடம் எவ்வளவு பேசினாலும் இந்த அரசாங்கம் தனது பேச்சைக் கேட்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
பகமுன நகர மத்தியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேரில் சென்று பார்வையிட்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி மொரகஹகந்த மற்றும் எலஹெர கமநல இயக்கத்தின் 41 விவசாய அமைப்புக்கள் கடந்த 24 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து இன்று எட்டு நாட்கள் நிறைவடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.