நாடளாவிய ரீதியில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் பால்மாக்களின் விலைகளையும் அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மில்க்ரோ நிறுவனம் 400 கிராம் பால்மா பொதியின் விலையை, 470 ரூபாய் வரையில் அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளது.
எனினும் இதுதொடர்பில், இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதேநேரம், பெல்வத்த நிறுவனம் 380 ரூபாவாக இருந்த 400 கிராம் பால்மா பொதியின் விலை 460 ரூபாயென நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பையே தாங்கிக்கொள்ள முடியாமல் திண்டாடும் மக்களுக்கு உள்ளூர் பால்மாவின் விலையும் அதிகரிப்பு என்ற செய்தி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைலேண்ட் பால்மா விலை
1கிலோ - ரூ. 1170 (ரூ. 225 இனால் அதிகரிப்பு)
400 கிராம் - ரூ. 470 (ரூ. 90 இனால் அதிகரிப்பு)