கொழும்பு கிராண்ட்பாஸ் மொலவத்தை பிரதேசத்தில் ஒருவரை கடத்தி 1 மில்லியன் ரூபா கப்பம் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவம் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும், சந்தேகநபர்கள் பிரதேசவாசிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவல்துறைக்கு அறிவிக்க வேண்டாம் என அச்சுறுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட நபரின் மனைவி 1 மில்லியன் ரூபாவை தனியார் வங்கியில் வைப்பிலிட்டுள்ளார்.
வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் கடந்த 29ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.