ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் சுனேத்ரா மஹாதேவி பிரிவென் ராஜமஹா விஹாரயின் விஹாராதியுமான கௌரவ பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ நாயக தேரரின் இன்று (10) பிறந்த தினத்தை முன்னிட்டு ஹிந்து, இஸ்லாம், கிருஸ்துவ மத சர்வமதத் தலைவர்களான சிவ ஸ்ரீ கலாநிதி பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் அருட்தந்தை கலாநிதி சிக்ஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் போது சர்வமதத் தலைவர்களுடன் இன மத ஒற்றுமைக்கான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லும் விஷேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.