நாட்டில் சீமெந்துக்கான தட்டுப்பாடு அதிகருத்து வரும் நிலையில், கம்பஹா மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களில் ஒரு மூடை சீமெந்து 1,400 ரூபா முதல் 1,500 ரூபா வரையிலான விலைகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக, பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் சீமெந்துக்கான தட்டுப்பாடு அதிகருத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே, கம்பஹா மாவட்டத்தில் 950 ரூபா அல்லது 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சீமெந்து மூடை ஒன்றின் விலை, தற்சமயம் தட்டுப்பாடு காரணமாக 1,400 ரூபா மற்றும் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடை, வெயாங்கொடை, மீரிகம, நீர்கொழும்பு, திவுலப்பிட்டிய, ஜா - எல மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு அதிக விலையில் சீமேந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இதன் காரணமாக, இப்பிரதேசங்களிலுள்ள கட்டிட வேலை செய்யும் கூலித்தொழிலாளிகளும், வீடு கட்டுவோருமே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில், சம்பந்தப்பட்ட விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்க முன்வர வேண்டும் எனவும் பொதுமக்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐ. ஏ. காதிர் கான்
கம்பஹா மாவட்ட நிருபர்