திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இந்தியாவுடன் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2024 ஆம் ஆண்டுடன் நிறைவுப் பெறும்.என எதிர்தரப்பினர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு அமைய திருகோணமலை எண்ணெய்தாங்கிகள் இந்தியாவிற்கு நிரந்தரமாக வழங்கப்பட்டுள்ளது. என்பதே உண்மை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலங்கையில் அரசியல் கைதிகளே இல்லை - உதய கம்மன்பில | Virakesari.lk
'பென்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில் இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். எனவும் குறிப்பிட்டார்.
வலுசக்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்திய வெளியுறவு செயலாளரின் வருகையை தொடர்ந்து தொழிற்சங்கத்தினரும்,எதிர்க்கட்சியினரும் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அரசாங்கம் மீண்டும் இந்தியாவிற்கு வழங்க போகிறது. என போராட்டங்களை முன்னெடுத்து தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்திய நிறுவனத்தின் வசமுள்ளது. அவர்கள் வசமுள்ள தாங்கிகளை அவர்களுக்கு எவ்வாறு மீண்டும் வழங்க முடியும்.தவறான புரிதல்களுடன் போர்கொடி உயர்த்துவதை தொழிற்சங்கத்தினரும்,இவர்களை பின்தொடரும் எதிர்க்கட்சியினரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
திருகோணமலை எண்ணெய்தாங்கிகள் தொடர்பில்1964ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்துடனும், 1987ஆம்ஆண்டும். 2003ஆம் ஆண்டும் இந்தியாவுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு எண்ணெய்தாங்கிகள் தொடர்பிலான புதிய ஒப்பந்தம் புதுடில்லியில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்தியாவின் வசமுள்ள திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் 2024ஆம் ஆண்டு இலங்கை வசமாகும்என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.1987ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனாவிற்கும், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்திக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்திற்கு அமைய திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு நிரந்தரமாகவே வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் 2 ஆம் பிரிவில் 3 ஆம் பந்தியில் இவ்விடயம் மிக தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது.2003ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கம் ஜே.ஆர் செய்த ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு நிரந்தரமாக வழங்கும் போது அமைதி காத்த ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கத்தினர், தற்போது தாங்கிகளை மீள பெற முயற்சிக்கும்போது தவறான புரிதல்களுடன் எதிர்ப்பு தெரிவிப்பது முட்டாள்தனமான செயற்பாடாகும்.
உலக நாடுகளின் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் முறையற்ற வகையில் கோடிக்கணக்கான சொத்துக்களை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் 'பென்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் பெயரும், தொழிலதிபரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து இலஞ்சஊழல் ஆணைக்குழு முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.என்றார்.
-இராஜதுரை ஹஷான்