சீனாவின் உட்கட்டுமான கடன் உதவி காரணமாக இலங்கை பாரிய வெளிநாட்டுக் கடனுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் அச்சடித்து வெளியிடப்படும் அதிக நாணயத்தாள் காரணமாகவும், இலங்கை பாரிய பொருளாதார வங்குரோத்து நிலைக்குள் தள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணயம் நிதியம் நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அறிக்கை ஒன்றினை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3.6 ஆக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருப்பாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் உலக அளவிலும், இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வெளிநாடுகளினால் வழங்கப்பட்டுவரும் நிதியளிப்புக்கள் திடீர் என நிறுத்தப்படும் சந்தர்ப்பத்தில் பாரிய பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என உலக வங்கியும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஆசியக் கண்டத்தில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் பாரிய நிதி நெருக்கடிக்குள் சிக்கித் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.