துறைமுகத்தில் சிக்கியுள்ள பால்மா இருப்பு அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட பால்மா அடுத்த வார இறுதியில் இருந்து சந்தையில் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை தெரிவித்த லக்ஷ்மன் வீரசூரிய, பால்மா விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர், 300,000 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட பால்மா துறைமுகத்தில் சிக்கி இருப்பதாகவும், குறித்த டொலர்களை வணிக வங்கிகளுக்கு அரசு வெளியிடாத காரணத்தினால் பால்மாவினை வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)