திருமண வைபவமொன்றில் இசை; துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமண வைபவமொன்றில் இசை; துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!


கிழக்கு ஆப்கானிஸ்தானில் இசைப்பதை நிறுத்துவதற்காக, தங்களை தலிபான்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட துப்பாக்கிதாரிகள் திருமண நிகழ்வில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.


நங்கர்ஹர் மாகாணத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் பலியாகி மேலும் 10 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.


மேலும் துப்பாக்கி ஏந்திய மூவரில் இருவர் கைது செய்யப்பட்டதாக தலிபான் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.


1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியின் போது இசை நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டபோதும் புதிய அதிகாரிகள் இதுவரை அத்தகைய கட்டுப்பாடுகளை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.