12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1,257 ரூபாவாலும், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபாவாலும், 2.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாவாலும் இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 520 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.