தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த போதிலும், ஐசிசி டி20 உலகக் கிண்ண அரையிறுதிக்கான வாய்ப்பை இலங்கை அணி இன்னும் கைவிடவில்லை.
அதன்படி, அரையிறுதி வாய்ப்பை அடைய, இலங்கை தனது கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று மேலதிகமாக 06 புள்ளிகளை பெற வேண்டும்.
இவ்வாறு இலங்கை அணி ஆறு புள்ளிகளுடன் முடிவடைந்ததாகக் கருதினால், NRR விளையாட்டிற்கு வராமல் அவர்கள் எவ்வாறு தகுதி பெற முடியும் என்பது பற்றி கீழே காணலாம். (யாழ் நியூஸ்)
- இங்கிலாந்து அணி இலங்கையிடம் தோல்வி அடைந்து, தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்த வேண்டும்.
- மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி தோல்வியடைய வேண்டும்.
- தென்னாப்பிரிக்கா அணியானது பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் தோல்வியடைய வேண்டும்
- பங்களாதேஷ் அணியானது அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்த வேண்டும்
- மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியாவினை வீழ்த்தி இலங்கையிடம் தோற்க வேண்டும்
இவை அனைத்தும் நடந்தால், நெட் ரன் ரேட் (NRR) முறைப்படி பாதிப்பின்றி இலங்கை அணி முன்னேற முடியும்.
இருப்பினும், இலங்கை அணிக்கு இன்னும் தகுதி பெறக்கூடிய வேறு வழிகளும் உள்ளன, ஆனால் அந்த சூழ்நிலைகளில் NRR செயல்பாட்டுக்கு வரும். (யாழ் நியூஸ்)