பொதுபல சேனாவின் (BBS) பொதுச் செயலாளர் ஞானசார தேர்ரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிப்பது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பணிக்குழு அமைப்பது குறித்து தன்னிடம் ஆலோசிக்கப்படவில்லை என்றும், "இந்த நடவடிக்கை குறித்து நான் கவலைபடுகின்றேன்" என்று அமைச்சர் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார்
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை (27) நியமித்தார்.
இந்த செயலணியை அறிவித்த ஜனாதிபதி, பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமை தாங்குவதாகவும் அறிவித்தார்.
இலங்கைக்குள் ஒரு நாடு, ஒரே சட்டம் என்பதை நாட்டில் செயல்படுத்தும் பொறுப்பு பணிக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது
மேலும் சட்ட வரைவைத் தயாரித்தல், நீதி அமைச்சகத்தால் ஏற்கனவே தொகுக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்தல் மற்றும் பொருத்தமான திருத்தங்கள் உள்ளதா என்பதைத் தீர்மானித்தல் மற்றும் பொருத்தமானதாகக் கருதப்படும் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தல் போன்றவை இக்குழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)