கடுமையான எச்சரிக்கை விடுத்த இராணுவ தளபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடுமையான எச்சரிக்கை விடுத்த இராணுவ தளபதி!

உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் அவ்வாறு இடம்பெறாமல் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரதும் பூரண ஒத்துழைப்பு அவசியம் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை வழிகாட்டல் சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றத் தவறினால் மீண்டும் ஆபத்து நிலையை எதிர்நோக்க வேண்டிவரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு தாம் அனைத்து மக்களுக்கும் தயவான வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் அறிவு மிக்கவர்கள் என்பதால் அவர்களுக்கு புதிதாக அது தொடர்பில் எதையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ள அவர், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.