நாட்டில் எந்தவிதத்திலும் பஞ்சம் ஏற்பட இடமளிக்க போவதில்லையென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பில் விவசாய அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைச்சுக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடத்திற்கான பாதீட்டில் முழு வருடத்திற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தந்த செயற்திட்டங்களுக்காகக் கட்டம் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யத் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.