இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 43 மரணங்கள் நேற்று (05) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் இதுவரை 13,185 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
இவ்வாறு மரணமடைந்த 43 பேரில், 23 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 36 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.