ஃபேஸ்புக் மெசஞ்சர் வழியாக பேஸ்புக் சுயவிவர ஹேக்கிங் அமைப்பு ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.
லங்கா சர்க்கரை நிறுவனத்தின் தலைவர் ஜனக நிமலச்சந்திர அவரது முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்ட பின்னர் அதன் ஹேக்கிங் முறையை வெளிப்படுத்தினார்.
ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் ஹேக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் கணக்கின் நண்பர் பட்டியலுக்கு அனுப்பப்படும் மெசேஜ் ஒன்றின் மூலம் ஹேக்கிங் அமைப்பு செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த மெசேஜில், பெறுநரின் ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு, பெருநருக்கு வெப்லிங்க் ஒன்றினை அனுப்பி அதனை கிளிக் செய்யுமாறு வலியுறுத்தி அவரது கணக்கு ஹேக் செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயல்முறையில் பெறுநரின் ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்படுவதாக நம்புவதால், அவர் அந்த இணைய இணைப்பை கிளிக் செய்கின்றனர் என்றார்.
"இப்போது எனது ஃபேஸ்புக் கணக்கிற்கு எனக்கு அணுகல் இல்லை, ஆனால் கணக்கு செயலில் உள்ளது மற்றும் யார் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் எனது நண்பர்கள் பட்டியலில் உள்ள அனைவருக்கும் ஒரே செய்தியை அனுப்புகிறார்கள். உங்களுக்கு இதே போன்ற மெசேஜ் வந்தால் அந்த மெசேஜை திறக்காதீர்கள்” என்று ஜனக நிமலச்சந்திர எச்சரித்துள்ளார்.
மேலும் அவர் இது போன்ற மோசடிகளில் எச்சரிக்கையாக இருந்தபோதிலும், அவரது ஃபேஸ்புக் நண்பர் ஒருவரின் கணக்கில் இருந்து அவருக்கு அனுப்பப்பட்டதால் அவர் அந்த லிங்கினை கிளிக் செய்ததாக தெரிவித்தார்.
இதற்கு பிறகு அவரது பேஸ்புக் கணக்கிற்கான அணுகலை இழந்தார். மேலும் அந்த ஃபேஸ்புக் கணக்கிலிருந்து ஈமெயிலினை ஹேக்கர் அகற்றிவிட்டதாக தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது பரவி வரும் ஃபேஸ்புக் தொடர்பான ஹேக்கிங் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார். (யாழ் நியூஸ்)