நேற்றிரவு (07) இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இராகலை, முதலாம் பிரிவு தோட்டத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடொன்றிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இராகலை காவல்துறையினர் குறித்த வீட்டைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையிட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.
அத்துடன், தீப்பரவலுக்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.