கடந்த 11ஆம் திகதி புத்தளம் பகுதியில் நடந்த ஒரு கத்திகுத்து விவகாரம் சம்பந்தமாக, போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அதாவது நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒரு சாரார் அதற்கான விழாவை கொண்டாட முற்பட்டபோது, இன்னொரு சாரார் தடுத்ததாகவும், அதன்போது ஏற்பட்ட சச்சரவில் அதைத் அடுத்தவர்களினால், அதைக் கொண்டாடியவர்களுக்கு கத்தியால் குத்தப்பட்டு காயப் படுத்தப்பட்டனர், என்றொரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலாவந்து கொண்டிறுக்கின்றது.
இது தொடர்பாக சூபி கொள்கையை பின்பற்றக்கூடிய ஒரு மெளலவி இச்சம்பவம் தொடர்பாக, தவறான பொய்யான விளக்கத்தை அளித்துள்ளார்.
மேலும் இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி பயன்படுத்தி, சர்சைக்குறிய தேரர் ஒருவரும், இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதி அதன் மூலம் இச்சம்பவத்தை தமக்கு சாதகமாக பூதமாக ஆக்கியுள்ளார்.
உண்மையில் இச்சம்பவமானது. இரு சாராருக்கு இடையிலான காணி தகராறு ஒன்றின் மூலமாக ஏற்பட்டது என அப்பகுதி மக்களும் அப்போது கிராம சேவகரும் உண்மையை விளக்கம் அளித்துள்ளனர்.
இன்னொருவருக்குச் சொந்தமான காணியை, சூபிகளின் பள்ளிவாசலை நிர்வகிக்கும் மற்றொருவர் பலாத்காரமாக தனதாக்கிக் கொள்ள முற்பட்டபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காணியை பறிக்கச் சென்றவர் மக்களின் ஆதரவை தம் பக்கம் இழுப்பதற்காக இதை ஒரு மார்க்க விவகாரமாக மாற்றியுள்ளார் என்பதே உண்மை.
மேலும் இவரின் இவ்வாறான போலியான தகவல் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை இன்னும் நெருக்கடிக்குள் ஆக்கியுள்ளதோடு, முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கும் சங்கடமான நிலைமையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இந்த மெளலவியானவர் விளக்கமளிக்கும் போது முஸ்லீம் சமூகத்தை பயங்கரவாதிகள் என்ன படுமோசமாக சித்தரிக்கின்றார்.
இவ்வாறானவர்களின் செயல்பாடுகள் முஸ்லீம் சமூகத்தை இன்னும் படு பாதாளத்திற்குள் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இவ்வாறானவர்கள் தொடர்பாக முஸ்லிம் மக்கள் விழிப்புடன் வேண்டும்.
இவர் தற்போதான காலகட்டத்தில் இவ்வாறான சம்பவங்களை தீர விசாரித்த பின்பே விளக்கங்கள் வழங்கியிருக்க வேண்டும்.
எனவே இது சம்பந்தமாக தவறான விளக்கத்தை மக்களுக்கு அளித்த மௌலவி, உடனடியாக முன்வந்து மக்களுக்கு இது சம்பந்தமாக சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
-பேருவலை ஹில்மி