மேலதிக வகுப்புகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து நிதி அமைச்சர் மற்றும் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் சிலருக்கு இடையில் இன்று (16) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் எதிர்வரும் தினத்தில் சுகாதார அமைச்சருடனும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இன்று முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் மேலதிக வகுப்புக்களை நடாத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.