கணினி அமைப்பு செயலிழந்துள்ளதன் காரணமாக மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை நாளை (13) முதல் இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதன்மைச் செயலாளர் ஜே.எம்.சி. ஜயந்தி விஜேதுங்க தெரிவித்தார்.
தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான கணினி அமைப்பில் அடிக்கடி ஏற்படும் செயலிழப்புகள் காரணமாகவே அனுமதிப் பத்திரம் வழங்கும் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்காலிக நடவடிக்கையாக 13.10.2021 முதல் 26.10.2021 வரை அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.