கொரோனா தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்பட்டு சில நாடுகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற மொல்னுபிரவிர் (Molnupiravir) என்ற வில்லையை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகின்றது.
இதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரையொன்றை வழங்கும்படி சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரியதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.
மர்க் என்ற ஔடத உற்பத்தி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த வில்லை மீது உலக நாடுகளின் அவதானம் திரும்பியுள்ளது.