எவரினதும் அடிமைகளாக வாழ்வதற்கு விரும்பவில்லை என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று (06) நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
எதேச்சதிகார போக்கில் தன்னிச்சையாக நாங்கள் மட்டும் தான் என எண்ணி செயற்பட வேண்டாம். அவ்வாறு செய்தால் அதற்கு எவ்வாறான அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்பது எமக்குத் தெரியும்.
திருகோணமலை துறைமுகத்தை நிர்வாகம் செய்வது என்பது ஒட்டுமொத்த உலகினையே ஆட்சி செய்வதாகவே கருதப்படுகின்றது.
எனவே ஏனைய பிரச்சினைகளின் போது நடந்து கொண்டது போன்று இந்தப் பிரச்சினையில் நடந்து கொள்ள வேண்டாம். என்ன பொய் சொன்னாலும் மக்கள் உண்மையை கண்டறிந்து விட்டனர்.
ஜனாதிபதி அவர்களே ஊழல் மோசடிகளை தவிர்த்தால் நாட்டில் பணப்பிரச்சினை இருக்காது. ஊழல் மோசடி செய்பவர்கள் யார் என்பது பற்றிய விரபங்கள் என்னிடம் உண்டு.
தேசிய சொத்துக்களை பாதுகாப்பதாக கூறி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் இன்று வழி தவறியுள்ளது.இந்த நாட்டுக்கு நாம் அந்நியர்கள் கிடையாது, நாம் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.