இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 12 சுற்றில் இலங்கை அணி இன்று மற்றுமொரு போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியுடனான இப்போட்டி, ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி தொடரில் நிலைத்திருக்க இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமான அம்சமாகும்.
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. (யாழ் நியூஸ்)