கல்கிசை - டி சாரம் வீதியில் அமைந்துள்ள விபச்சார விடுதி ஒன்றில் வைத்து ஐந்து வெளிநாட்டு பெண்களும் விடுதியின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நேற்று (29) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டுப் பெண்கள் இந்தோனேசியப் பிரஜைகள் எனவும் முகாமையாளர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)