இச்சம்பவம் தொடர்பில், தாக்குதலுக்கு இலக்கான நபர் பணியாற்றிய உணவுத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, தனது வர்த்தக நிலையம் அமைந்துள்ள காணியின் முன்னாள் உரிமையாளரின் அறிவிப்பின் பேரில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து தெரிவித்த குறித்த வர்த்தகர், தான் குறித்த காணியை 2011ஆம் ஆண்டு 1.5 கோடி ரூபாவுக்கு வாங்கியதாகவும், அதன்பின்னர் குறித்த காணியை விற்பனை செய்த நபர், தெமட்டகொடை பொலிஸாருடன் இணைந்து தனக்கு தொடர்ந்தும் இடையூறு செய்து வந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தெமட்டகொடை தலைமை காவல்நிலையத்தின் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய நிலையில் அண்மையில் உதவி பொலிஸ் அத்தியட்சகராகத் தரமுயர்த்தப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, இந்தச் சம்பவத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதாகக் குறித்த வர்த்தகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தான் எதிர்நோக்கும் பிரச்சினைகுறித்து தொடர்ந்தும் தெமட்டகொடை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு அளித்தபோதிலும் அவர்கள் அதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனக் குறித்த வர்த்தகர் தெரிவித்தார்.