விமல் வீரவங்க மற்றும் மூன்று ஊடக நிறுவனங்ளுக்கு எதிராக இடைக்காலத்தடை கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தெரண, ஹிரு மற்றும் ஸ்வர்ணவாஹினி ஆகிய ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடைக்கால தடை விதிக்குமாறு அவர் விடுத்திருந்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே நிராகரித்துள்ளார்.
குறித்த வழக்கை மீண்டும் ஜனவரி மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.