பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் தனது பெயரை தொடர்புபடுத்தி ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.
கிரிக்கெட்டில் ஈடுபடவோ அல்லது LPL போட்டிகளுக்காக விளையாடவோ விரும்பவில்லை என தனது ட்விட்டர் பதிவில் அறிக்கை ஒன்றின் மூலம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.