உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதியளவு டொலர்கள் இல்லாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை காரணமாக நாட்டில் அத்தியாவசியமான இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதுடன் பொருட்களின் விலைகள் அதிகரிக்குமென அதன் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
டொலர்கள் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே சீனி கொள்கலன் இருநூறு கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்தியாவசிய உணவுப் பொருளை கொள்வனவு செய்வதகு ஒரு மாதத்திற்கு குறைந்தது 100-110 மில்லியன் டொலர்கள் செலவாகும். (யாழ் நியூஸ்)