கொழும்பு பெல்லன்வில ராஜ மகா விகாரையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை விகாரை வளாகத்தை சுத்தம் செய்த நபரால் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் எஸ்எஸ்பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் அழுக்கு படிந்திருந்ததாகவும், இது சில காலத்திற்கு முன்பு விகாரையினுள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கைக்குண்டானது வெளியில் இருந்து விகாரை வளாகத்திற்குள் வீசப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நீண்ட காலமாக விகாரையினுள் இருந்தபோதிலும், கைக்குண்டு இன்னும் செயலில் இருப்பதாகவும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். (யாழ் நியூஸ்)