உயிரை சவாலுக்கு உட்படுத்தக் கூடிய மிகவும் ஆபத்தான 8 மணித்தியால சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இருதய கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஹரீனுக்கு இன்றைய தினம் மிகவும் பாரதூரமான சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த சத்திர சிகிச்சையானது மிகவும் ஆபத்தானது. உயிரையை சவாலுக்கு உட்படுத்தக் கூடியது என ஹரீன் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தமக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது எனவும் பிரார்தனை செய்த அன்பை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி எனவும் ஹரின் பெர்னாண்டோ தனது அதிகாரபூர்வ முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.அவரது ஊடகப் பிரிவினால் இந்த பதிவு இடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதமும் ஹரீனுக்கு ஆபத்தான இருதய சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.