கொழும்பு துறைமுக நகரில் 72 புதிய முதலீட்டு சந்தர்ப்பங்களுக்காக முதலீட்டாளர்களை அழைக்க எதிர்பார்த்துள்ளதாக துறைமுக நகர ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த 72 முதலீட்டு சந்தர்ப்பங்களில் 6 முதலீடுகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏனைய முதலீட்டு வாய்ப்புகளை பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வழங்க துறைமுக நகர ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
முதலீட்டின் தன்மை, அவர்கள் பெற்றுக்கொள்ளும் காணிகள் பரப்பளவு ஆகியவற்றுக்கு அமைய 72 முதலீடுகளுக்கான கட்டணங்கள் அறவிடப்படும்.
முதலீடுகளை ஆணைக்குழு ஏற்றுக்கொண்ட பின்னர், இலங்கை வர்ததக சங்க பதிவாளர் அலுவலகத்தல் முதலீடுகள் குறித்த பதிவுகளை மேற்கொண்ட பின்னர், பணிகளை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அந்த பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.