174 நாட்களுக்குப் பின் பிணையில் விடுதலையான ரிசாட் பதியூதீனுக்கு பௌத்த தேரர்கள் உட்பட பெருமளவான மக்கள் வரவேற்பளித்துள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, சுமார் 174 நாட்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் கடந்த 14ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
விடுதலையான ரிசாட் பதியூதீன் நீண்ட நாட்களுக்கு பின் புத்தளத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது பதியுதீனை அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் ஆனந்த கண்ணீருடன் வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
இதன்போது ரிசாத் பதியுதீனின் புத்தளம் இல்லத்திற்கு வருகை தந்த குருணாகல் மகநாயக தேரர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் நலன்கள் குறித்து விசாரித்ததுடன் அவருக்கு ஆசியும் வழங்கிச் சென்றார்.