மெகசின் சிறைச்சாலையில் ஈரானியர்கள் இருவர் பலி! மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
Posted by Yazh NewsAuthor-
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் தொற்று நீக்கியை (Sanitizer) அருந்தியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 10 ஈரானியர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த 12 பேரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.