இஸ்ரேலில், பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 6 பாலஸ்தீனிய போராளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
பாலஸ்தீனக் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை அருகே அமைந்துள்ள கில்போவா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 5 பாலஸ்தீனிய போராளிகள் மற்றும் போராளி இயக்கத்தின் முன்னாள் படைத் தளபதி ஒருவர், கழிவறையின் தரையில் பள்ளம் தோண்டி தப்பி சென்றனர்.
அவர்கள் மேற்கு கரை அல்லது ஜோர்டான் நாட்டிற்கு செல்லக்கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)