இலங்கை கிரிக்கெட் வாரியமனாது (SLC) சர்வதேச மகளிர் கிரிக்கெட் நட்சத்திரங்களின் பங்கேற்புடன் கொண்ட மகளிர் டி20 போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்தப் போட்டிக்கு ‘லங்கா விமன்ஸ் சூப்பர் லீக் டி20’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 போட்டிகளை கொண்ட போட்டித் தொடர் தம்புள்ளை அல்லது பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரானது ஒரு அணியில் அதிகபட்சம் 6 வெளிநாட்டு வீராங்கனைகள் அடங்களாக 4 அணிகளை (உரிமம் கொண்ட அணிகள்/Franchise) கொண்டிருக்கும்.
லங்கா விமன்ஸ் சூப்பர் லீக் டி20 யை கையாளும் வகையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) இப்போது விளையாட்டு சந்தைப்படுத்தல்/ மேலாண்மை நிறுவனங்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது செப்டம்பர் 7 செவ்வாய்க்கிழமை மதியம் 01.00 மணிக்கு முடிவடையும் என்று கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)