இலங்கை கபடி வீரரும், இலங்கை கடற்படை அதிகாரியுமான அன்வர் சஹீத் பாபா இந்திய புரோ கபடி லீக் (PKL) போட்டிகளுக்காக, தமிழ் தலைவாஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளார்.
அன்வர் சஹீத் பாபா 1 மில்லியன் இந்தியா ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதோடு, இவ்வாறான சம்பவம் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகும்.
புரோ கபடி லீக்கின் (PKL) எட்டாவது சீசனுக்கான ஏலம் மும்பையில் ஆகஸ்ட் 29-31 வரை நடைபெற்றது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்தியாவில் அதிகம் மக்களால் பார்க்கப்படும் லீக் (தொடர்) இதுவாகும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு நடத்தப்படாத PKL இவ்வருடம் (2021) டிசம்பர் இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அம்பிலிப்பிட்டியைச் சேர்ந்த அன்வர் சஹீத் பாபா, இந்த ஆண்டு PKL போட்டிக்காக வாங்கப்பட்ட 22 வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். (யாழ் நியூஸ்)