இன்று காலை சர்வர் கோளாறால் இன்ஸ்டாகிராம் சேவை இலங்கையிலும், உலகின் சில பகுதிகளிலும் திடீரென முடங்கியது.
இன்ஸ்டாகிராம் சேவை இலங்கையிலும், உலகின் சில பகுதிகளிலும் இன்று திடீரென முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம், உலக நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பிரபலமான சமூக வலைத்தளம் ஆகும். இந்தியாவில் பெருமளவில் இஸ்டாகிராம் பயன்பாட்டாளர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இன்று காலை திடீரென இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் என இரண்டு வகை டிவைஸ்களிலும் இன்ஸ்டா முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. பலருக்கும் இன்ஸ்டா ஆப் லோட் ஆகவில்லை.
இன்ஸ்டா பயன்பாட்டாளர்கள் பலருக்கும் திடிரென ஆப்பில் கோளாறு ஏற்பட்டதால் எனக்கு மட்டும் தான் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள டிவிட்டர், பேஸ்புக் போன்ற தளங்களில் இன்ஸ்டா முடக்கம் குறித்து கேள்வி எழுப்பி தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இன்று காலை சர்வர் கோளாறால் இன்ஸ்டாகிராம் சேவை இலங்கையிலும், உலகின் சில பகுதிகளிலும் திடீரென முடங்கியதாக டவுன் டிடக்டர் எனப்படும் இணையதளங்களை கண்காணித்து வரும் வலைத்தளம் கூறியுள்ளது. சுமார் 45 சதவீதத்தினர் தங்களின் மொபைல்களில் இன்ஸ்டாகிராம் செயலியில் லோட் ஆகவில்லை எனவும், 33 சதவீதத்தினர் வெப்சைட்டில் இன்ஸ்டாகிராம் லோட் ஆகவில்லை எனவும் மிச்சமுள்ள 22 சதவீதத்தினர் சர்வர் இணைப்பில் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாக காட்டுவதாகவும் புகார்கள் கூறியிருப்பதாக டவுன் டிடக்டர் தெரிவித்திருக்கிறது.