இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் தனது இராஜாங்க அமைச்சர் மற்றும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக “லங்காதீப” சிங்கள பத்திரிகை இன்று தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்பை ஏற்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர் இராஜினாமா செய்வார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி லக்ஷ்மன் சர்வதேச நாணய நிதியத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திரு கப்ரால் தனது தற்போதைய பதவியில் இருந்து விலகுவார் என்று அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)