அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், எதிர்வரும் முதலாம் திகதி முதல் அரச பொதுச் சேவைகளை வழமை போல மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.
இதற்கான, சுற்றுநிருபம் நாளை (30) வெளியாகும் எனவும் அரச சேவைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தெரிவித்துள்ளார்.