பெண் ஒருவர் ஒரே பிரவசத்தின் மூலம் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த சம்பவம் ஒன்று புத்தளம் வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
குறித்த அப்பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் 14 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து பின்னர் அவர் வெளியேறினார்.
எனினும், கர்ப்பத்தின் 34 வாரங்கள் முடிந்த பிறகு, உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு மூன்றி குழந்தைகளை எதிர்பார்த்த மருத்துவமனை அதற்கான ஆயத்தங்களை செய்ததாக கூறப்படுகிறது
பின்னர் அங்கு அப்பெண் கர்ப்பத்தின் 35 வது வாரத்தில் சிசேரியனுக்கு உட்படுத்தப்பட்டார்.
வெற்றிகரமாக நிறைவுபெற்ற சிகிச்சையின் பின்னர் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூன்று சிசுக்களும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.