சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் என்பவரே உயிரிழந்தார்.
அவர் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாற்று திறனாளியான அவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது.
வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை திடீரென சுவாசச் சிரமம் ஏற்பட்ட நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.