![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE5-gvWnNwK6UGAJg7nD09cwuVIpof8eSqvb1ljQf6wUxbQCqL0c55h5-E6IilEtYQZF-9rMIDKFxO0Vh5AhgmGABUZoaX-ZZ9qu4H117qvhTTWhZa310VsdE-hSe8gniqk2PDbJep-EI/s16000/hospital.jpg)
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்று வந்த நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.
சில நாட்களாக கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கண்டி தேசிய வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து இன்று (04) காலை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடுமையான காயங்களுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இவர் கண்டி - அலவத்துகொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும் தற்கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேறகொண்டு வருகின்றனர்.