சுற்றுலா துறையை மேம்படுத்தவும், அந்நிய செலாவணியை நாட்டிற்கு ஊக்குவிக்கவும் டிஜிட்டல் நாடோடி விசா முறையை அறிமுகப்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவிக்கையில், டிஜிட்டல் நாடோடி அமைப்பு, வெளிநாட்டவர்களை இலங்கைக்கு வந்து தங்கள் வெளிநாட்டு வேலைகளை தொலைவேலை அடிப்படையில் தொடர உதவும்.
"இந்த அமைப்பின் விசா கொடுப்பனவுகள் மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் நாட்டின் வருமானம் பெருகும், அமைச்சரவை அமைச்சர்கள் ஏற்கனவே இந்த முன்மொழிவை அனுமதித்துள்ளனர்" என தம்மிக்க விஜேசிங்க தெரிவித்தார்.
செல்வாக்கு மிக்க பிரெஞ்சு பயண மற்றும் சுற்றுலா ஆபரேட்டர் கிளப் மெட் (French travel and tourism operator Club Med.) மூலம் 2021 ஆம் ஆண்டில் டிஜிட்டல் நாடோடிகளுக்கு இலங்கை இரண்டாவது சிறந்த இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)