ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஜூலை மாதத்தில் மிகவும் சுறுசுறுப்பான பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ளனர்.
manthri.lk நடத்திய ஒரு கணக்கெடுப்பில், இந்த மாதத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் குறிப்பிட்ட இந்த உறுப்பினர்கள் அதிக பங்களிப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, கடந்த ஜூலை மாதம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கினர் என பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு:
- சாணக்கியன் ராசமாணிக்கம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
- சரத் வீரசேகர - பொது பாதுகாப்பு அமைச்சர்
- புத்திக பத்திரண - ஐக்கிய மக்கள் சக்தி
- முகமது அலி சப்ரி- நீதி அமைச்சர்
- பிரேம்நாத் சி. தொலவத்தே - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன