நியூஸிலாந்தின் - ஒக்லாண்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் அந்த நாட்டிடம் கோரியுள்ளது.
இலங்கை தூதுவரின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்தின் - ஒக்லாண்டில் சிறப்பு அங்காடி ஒன்றில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் ஒருவர் அங்குள்ள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வெளிநாட்டு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
குறித்த இலங்கையர் 10 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் வசித்து வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலானது, பயங்கரவாத தாக்குதலாகும் என நியூஸிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கையர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத குறித்த நபர், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.