ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரையிலான நிலவரப்படி, இலங்கையில் மொத்த கொரோனா மரண பதிவுகளில் 53% இறப்புகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன.
மேலும், சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, 23.5% இறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு பகுதியில் மிகக் குறைந்த கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, முல்லைத்தீவில் கொரோனா மரண வீதம் 0.1% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.